ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நட்பு நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.உலகம் முழுக்க பல்வேறு போர்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா – ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதே சமயம் இந்த போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகபோராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நட்பு நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க, பிரான்ஸ் போன்ற நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்..
இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டு உள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நில ரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்த காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்,அணு ஆயுத போராக இது உருவெடுக்கும் அச்சமும் உள்ளது. உக்ரைனை மண்டி போட வைக்க ஏற்கனவே ரஷ்யா அணு ஆயுதத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இஸ்ரேலின் வலிமையை காட்ட.. ஹமாஸை மொத்தமாக தலைமுறை தலைமுறையாக அழிப்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் கூட அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் இந்த போர் அணு ஆயுத போராக மாறினாலும் அச்சப்படுவதற்கு இல்லை.