மத்திய காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவில் உதவிப் பொருட்களை வாங்கக் காத்திருந்த மக்கள் மீது மீண்டும் இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன.சம்பவத்தை கண்களால் கண்ட சாட்சிகள் அங்குள்ள நிலைமை முற்றிலும் குழப்பமானது என விவரித்தனர்.
பாலஸ்தீனியர்களிடையே மரணப் பொறி என்று அழைக்கப்படும் குவைத் ரவுண்டானாவில் இஸ்ரேலியப் படைகள் பல முறை உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன .
மேலும் உதவி பொருட்களை வழங்குவதற்கு பொறுப்பான உள்ளூர் மற்றும் சேவை குழுக்களின் உறுப்பினர்களையும் இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததுள்ளன.உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு பொருட்களை பாதுகாப்பாக விநியோகிக்க அவர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது குற்றத்திற்குரியது என icj பலமுறை கண்டித்த பிறகும் இஸ்ரேலிய படைகள் இத்தகைய கொடிய சம்பவங்களை மேற்கொண்டுள்ளன
குறித்த சம்பவங்களை அடுத்து பலஸ்தீனிய செய்தி தொடர்பாளர் ஒருவர் “பசியில் வாடும் மக்கள் அந்த இடத்தின் ஆபத்தான தன்மையை உணர்ந்த போதிலும் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், மக்கள் தொடர்ந்து அங்கு செல்கிறார்கள். அவர்கள் குறிவைக்கப்படலாம் என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் வெறுங்கையுடன் திரும்ப விரும்புவதில்லை “என தெரிவித்தார்.