Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி!

பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி!

பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்போது உயிரிழந்த 14 பேரும் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 19அம் திகதி இரவு ரஃபாவின் புறநகர் பகுதியான டெல் சுல்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த காசா மக்களில் அதிகமானோர் எகிப்துக்கு அருகில் உள்ள ரஃபாவில் பதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News