Tuesday, December 24, 2024
HomeLatest Newsமுத்தத்தின் பின்னால் இவ்வளவு விசயம் இருக்கா?

முத்தத்தின் பின்னால் இவ்வளவு விசயம் இருக்கா?

காதலிக்கு அல்லது காதலனுக்கு நீங்கள் கொடுக்கும் அதிக முத்தங்களால் உங்களுக்கு என்னென்ன போனஸ் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்படும் முத்தம், நீங்கள் கொடுக்கும் நபரை பொருத்தும், வயதை பொருத்தும் அதன் அர்த்தம் மாறுபடும். குழந்தைக்கு கொடுக்கும் முத்தமும், குமரிக்கு கொடுக்கும் முத்தத்தின் அர்த்தமும் வேறுவேறு. என்றாலும், அதன் அடிநாதம் அன்பு தான்.

இரு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளும்போது, அன்பின் மிகுதியால் ஒருவரின் முழு அன்பையும் வெளிப்படுத்த அவர்கள் எடுக்கும் ஆயுதமே முத்தம் என்பதை  நீங்கள் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் புரியும். 

அந்த, அன்பு முத்தத்தின் விலை விலை மதிப்பற்றது. அதேநேரத்தில், ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்தத்தால் இருவருக்கும் சில ஆரோக்கியமான விஷயங்கள் கிடைக்கும். இதனை மனநல மருத்துவர்கள் தங்களின் ஆய்வில் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

காதலன் காதலிக்கு அல்லது காதலி காதலனுக்கு என அந்தந்த வயதினர் தங்களின் நெருக்கமானவர்களிடம் நாள் ஒன்றுக்கு பெறும் அதிகப்படியான முத்தத்தால் மன அழுத்தம் ஓடிப்போகுமாம். அகம் மகிழ்ந்து இருக்கும் அவர்கள் இருவருமே அன்றைய தினத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும், சோர்வில்லாமலும் இருப்பார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதில் கூடுதல் விஷேஷம் என்னவென்றால், முத்தமிட்டுக் கொள்பவர்கள் சாதாரண மக்களை விட கூடுதல் காலம் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மன அழுத்தத்தை குறைப்பதில் முத்தத்திற்கு முக்கியமான பங்கு உள்ளதாம். மன அழுத்தம் உள்ளவர்கள் தினம்தோறும் தனது இணையை முத்தமிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியுமாம்.

மன அழுத்தம் மட்டுமல்ல உடல் எடையை குறைப்பதிலும் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறதாம். உதட்டை கவ்வி கொடுக்கும் பிரெஞ்சு முத்தம் மூலம் பல கலோரிகள் உடலில் இருந்து எரிக்கப்படுகிறதாம். உடல் எடையை குறைக்க நாள் கணக்கில் ஓடுவது போல சில முத்தங்களையும் தட்டி விடலாமாம்.

சாதாரணமாக சுவாசிக்கும்போது 20 முறை காற்றை சுவாசிக்கிறோம். ஆனால் ஒரு தீவிர உதட்டு முத்ததிற்கு பின் 60 முறை வரை மூச்சை இழுத்து விடுகிறோமாம். இதனால் நுரையீரல் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுவாச பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் வழி செய்கிறது. இதுத்தவிர மேலும் பல நன்மைகளும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முத்தம் ஒவ்வொருவருக்குள்ளும் காதலையும், மனமகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதனால் நெருக்கமானவர்களுக்கு முத்த மழையை அள்ளிக் கொடுங்கள்.

Recent News