Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅதிகமாக யோசிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

அதிகமாக யோசிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

புராணங்களில் இருந்து தற்போது உள்ள காலகட்டம் வரை அதிகம் யோசிப்பவர்கள் என்றால் அது பெண்கள் தான். பெண்களுக்கு குழப்பவாதிகள் என்ற செல்ல பெயரும் உண்டு. மேலும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களை பற்றி யோசிக்கும் குணாதிசயம் உள்ளது. இது ஒரு வகையில் ஆற்றலும் கூட. இந்த குணாதியசத்தால் பெண்களால் ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் பலவற்றை பற்றி யோசிப்பது எல்லா நேரமும் நல்லதாக முடிவதில்லை. அதிக சிந்தனை அதிக குழப்பத்தை தருகிறது. இதனால் பெண்கள் அதிக சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

பொதுவாக அடிக்கடி கவலைப்படும் பிரச்சனை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கவலை மற்றும் மனஅழுத்தம், மனசோர்வு போன்றவை ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது. மேலும் மாதவிடாய் சுழற்றி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களில் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவும் பெண்களின் இந்த மனசோர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

சிலநேரத்தில் இது வழிவழியாக கூட வரலாம். சில பெண்களின் அம்மாவும், பாட்டியும் எப்போதும் கவலை படுபவர்களாக இருந்திருக்கலாம். கவலையும் மனசோர்வும் கூட மரபியல் வழியாக தலைமுறை தாண்டி வரக்கூடும். பெண்கள் பொதுவாகவே சின்ன சின்ன விஷயத்தை கூட பெரிதளவில் சித்தரித்து அதனை தன் மனதிலே பூட்டிக்கொண்டு வேதனை படுவார்கள். அது அவர்களுக்கு பழகிப்போன ஒரு விஷயம். இதனால் எந்த அளவிற்கு அவர்களின் மன அமைதி பாதிக்கின்றது என்பதை கூட அறியாமல் அவ்வாறு செய்கின்றனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் அதிகமாக அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். குடும்ப சூழல்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதுவும் பெண்களின் மனசோர்க்கு ஒரு முக்கிய காரணம்.

இதைத்தவிர பெண்கள் கர்ப்பகாலத்தில் கூடும் உடல் எடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தங்களின் உடலின் மாற்றத்தை பற்றியும், உடல் எடை கூடுதல் பற்றியும் அதிக நேரம் சிந்திக்கின்றனர். இவை அனைத்துமே பெண்களிடையே கவலையையும் மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன. அடிப்படியில் கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விட பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.

இயற்கையாகவே பெண்கள் உடல்ரீதியாக அதிகமான மாற்றங்களை சந்திக்கின்றனர். தாய்மை, மாதவிடாய், தாய்ப்பால் சுரத்தல் போன்றவை பெண்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இதுபோன்ற மாற்றங்கள் உடல் அமைப்பையும் மாற்றுகிறது. அதுவும் பெண்களின் மனசோர்வை அதிகமாக்குகிறது.

கவலையை தொடர்ந்து மன அழுத்தம் மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனை ஆரம்ப காலத்திலே கண்டறிந்து சரிப்படுத்த வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை சந்தித்து மருந்து சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் மனநலத்தை பேணிக்காப்பது.

மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும். அதனால் மனஆழத்தை மனழுத்தமாக மாற்றிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்  என கூறப்படுகிறது.

Recent News