Thursday, January 23, 2025
HomeLatest Newsநீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்குமா பப்பாளிப்பழம்?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்குமா பப்பாளிப்பழம்?

பொதுவாக பழங்களில் மிக இலகுவான பெற்றுக் கொள்ளக்கூடியதும் பலரால் விரும்பப்படும் பழங்களில் பப்பாளிப்பழம் முக்கிய இடத்தை பிடிக்கிறது.இதில் அதிகமான வைட்டமின் ஏ உயிர்சத்து இருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பப்பாளிப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதால் செரிமாண பிரச்சினை, மாதவிடாய் பிரச்சினை, மலச்சிக்கல், குருதிசோகை போன்ற பிரச்சினை குணமாகிறது.

இந்த பழத்தின் காய் முதல் பழம் மருத்துவ குணமிகுந்து காணப்படுகிறது, ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களை இந்த பழத்தை எடுப்பதை குறைந்துக் கொள்வது சிறந்தது.

அந்த வகையில் பப்பாளிப்பழத்தை எடுத்துக் கொள்ளும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பார்க்கலாம்.

எப்போதும் எலுமிச்சைப்பழத்துடன் பப்பாளிப்ழத்தை சேர்த்து உட்கொள்ளக்கூடாது. இது உடலிலுள்ள இரத்ததிலுள்ள ஹமோகுளோபினில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஆகவே இது போன்று எடுப்பது நல்லதல்ல.

தினமும் பப்பாளிப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதிகமான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனெனின் பப்பாளியில் அதிகமாக வைட்டமின் ஏ காணப்படுகிறது.

சரும தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் அதே சமயம், அதிகம் பயன்படுத்தினால் இதிலிருக்கும் பீட்டா கரோட்டின் சருமத்தில் உள்ள நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

புளிப்பு சுவையில் காணப்படும் பப்பாளிகள் இரத்திலிருக்கும் சக்கரையின் அளவை குறைக்கும் இது நீரழிவு நோயாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் அதிகமாக இருப்பதால் ஒவ்வாமையுள்ளவர்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மேலும் பழத்தை தோலிலுடன் சாப்பிடும் போது லேடெக்ஸ் என்ற பதார்த்தம் காணப்படுகிறது. இது சாப்பிட்ட பின் வயிற்றில் ஏரிச்சல், வயிற்று வலி மற்றும் செரிமாண தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

Recent News