Monday, February 24, 2025
HomeLatest Newsநாளை நாடு திரும்புகிறார் கோட்டா?

நாளை நாடு திரும்புகிறார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், சில காரணங்களினால் அவரது பயணம் பிற்போடப்பட்டதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Recent News