Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுளிர் காலத்தில் தயிர் உட்கொள்வது ஆபத்தா?

குளிர் காலத்தில் தயிர் உட்கொள்வது ஆபத்தா?

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

உட்கொள்ளும் முறை

தயிரை ரைதா, மோர் போன்ற வடிவில் உட்கொள்கிறோம்.பொதுவாக குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் ஏற்படும் என்று காலம்காலமாக கூறப்பட்டு வருகின்றது அதுமட்டுமல்லாது குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

தயிர் ஒரு சத்தான உணவாகக் கருதப்படுகிறது. இதில் லாக்டோபாகிலஸ் அசிடோபிலஸ், லாக்டோகாக்கஸ் லாக்டிஸ், லாக்டோகாக்கஸ் லாக்டிஸ் க்ரெமோரிஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்களும், புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 போன்றவையும் நிரம்பியுள்ளது.

குளிர்காலத்தில் தயிரை தவிர்க்க வேண்டிய உணவாக கருதுவது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையாகவே தயிர் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஒரு சரியான உணவு என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இதில் புரோபயாடிக் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இவை எந்த காலநிலையிலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல இரவு நேரத்தில் தயிர் ஒரு நல்ல உணவாக இருக்கும், இது மூளையில் டிரிப்டோபான் என்ற தனித்துவமான அமினோ அமிலத்தை வெளியிட உதவுகிறது.

இந்த அமிலம் ஒருவரை அமைதிப்படுத்தவும் மற்றும் தெளிவாக சிந்திக்கவும் செய்ய உதவுகிறது.

Recent News