Sunday, January 26, 2025
HomeLatest Newsபிக்பாஸில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் இவரா? - ரசிகர்கள் கணிப்பு...

பிக்பாஸில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் இவரா? – ரசிகர்கள் கணிப்பு பலிக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் யார் என்பதை இப்போதே ரசிகர்கள் கணித்து விட்டனர்.

இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்தவாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என தெரிகிறது .

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினமே… சில போட்டி பொறாமைகள் , சண்டைகள் சூடு பிடிப்பது புரோமோ மூலம் தெரியவந்தது.

இதில் ”ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது ”என கூறி ஜிபி முத்து ஆர்மியினரிடம் தனலட்சுமி வசமாக மாட்டியுள்ளார்.

எனவே இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் இவரை தான் முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புவோம் என ஜி.பி.முத்து ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில், மகேஸ்வரியிடம் சாப்பாட்டுக்காக பிரச்சனை செய்து சிக்கிய தனலட்சுமி தற்போது ஜிபி முத்து விஷயத்திலும் வசமாக சிக்கி உள்ளார்.

கடந்த சீசனில் கூட போட்டியாளர்கள் கணித்தது போலவே ஒவ்வொரு பிரபலங்கள் வெளியான நிலையில், இந்த முறையும் அப்படியே நடக்குமா? என்பதை அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent News