Monday, December 23, 2024
HomeLatest Newsதினம் ஒரு தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

தினம் ஒரு தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

பொதுவாக நம்முடைய உணவு பொருட்களில் அன்றாட பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமானது தக்காளியும் ஒன்றாகும்.

இதில் ஏராளமான ஊட்டச்த்துக்களும்  ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தக்காளியில் காபோவைதரேற்று , நார்ச்சத்துக்கள்,வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே1, வைட்டமின் பி9 (ஃபோலேட்) ஆகிய வைட்டமின் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. 

இதனை தினம் ஒன்று எடுத்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும். தற்போது அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.

தொடர்ந்து நம்முடைய தினசரி உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளும் போது அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. தக்காளியில் உள்ள அதிகப்படியான லைகோபின் மற்றும் கரோட்டீனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 

தக்காளி சருமத்தில் எத்திலினை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.மேலும் சருமத்தில் உண்டாகிற டேனை நீக்குவதோடு கருமையையும் போக்கி சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும். தக்காளி குடலில் இருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

தக்காளியை சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவது, பசியைக் கட்டுப்படுத்துவது,  மனநல ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் குடல் நுண்ணியிரிகள் பங்கு இன்றியமையாதது ஆகும்.

Recent News