Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅயர்ன் பாக்சை அடுப்பாக்கி சமையல்...!ஆண்கள் அசத்தல்..!

அயர்ன் பாக்சை அடுப்பாக்கி சமையல்…!ஆண்கள் அசத்தல்..!

துணிகளை இஸ்தரி செய்ய பயன்படுத்தப்படும் அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றி உணவு சமைக்கும் காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது தொடர்பான காணொளிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமூக ஊடகம் ஒன்றில் பகிரப்பட்டுள்ள அந்த காணொளியில், ஒருவர் சிக்கன் துண்டுகளை அயர்ன் பாக்சில் சூடாக்கி பொறிகின்றார்.

அந்த காட்சிகள் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளதுடன், பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிடவும் வழிவகுத்துள்ளது.

அதில் ஒரு பயனர், அந்த சிக்கனை வாஷிங் மெஷினில்(சலவை இயந்திரம்) இருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் வேறு ஒரு பயனர், உங்கள் சட்டை கோழி போன்ற வாசனையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கிடையில், இது ஆண்கள் விடுதி விஷயம் என்றும், ஆர்.ஐ.பி. அயர்ன் பாக்ஸ் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த காணொளி 3.5 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளுடன் மேலும் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News