மத்திய தரைக்கடல் பகுதியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மத்தியதரைக் கடல் மூடப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவலர்களின் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மத் ரேசா நக்ட் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். .
மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானிய ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவில் உள்ள கூட்டணி மட்டுமே காணப்படுகிறது.
ஆனால் மத்தியதரைக் கடலுக்கு ஈரானுக்கு நேரடி அணுகல் இல்லை என்பதால் மத்தியதரைக் கடல் வழியை ஈரான் எவ்வாறு மூடும் என்பதை தெளிவாக கூறமுடியாது.
அத்தோடு காசாவில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து என்பதோடு காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.