Tuesday, May 21, 2024
HomeLatest NewsWorld Newsசெயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஈரான்..!

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஈரான்..!

தனது தொலையுணா்வு செயற்கைக்கோள் ஒன்றை ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விண்வெளியிலிருந்து படமெடுக்கக் கூடிய தொலையுணா்வு செயற்கைக்கோளான ‘நூா்-3’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமிக்கு 450 கி.மீ. தொலைவிலிருந்தபடி அந்த செயற்கைக்கோள் செயல்படும் என்று அந்த நாட்டு தகவல்தொடா்புத் துறை அமைச்சா் இஸா ஜரேபூா் கூறியுள்ளார்.

ஈரான், அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அத்தகைய அணு ஆயதங்களை ஏந்தி தொலைதூரத்தில் தாக்குதல் நடத்தக் கூடிய ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை ஈரான் ஆய்வு செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

அந்தத் தடைகளை மீறி ஈரான் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும்போது ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பது வழக்கம்.

இந்தச் சூழலில், விண்ணில் செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட்டிலும் பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பதால், நூா்-3 செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது அத்தகைய பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Recent News