காசாவிற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான ஹவுதிக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதன் பின்னியில் ஈரான் உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
செங்கடலில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எதிராக ஈரான்
திட்டமிட்டுவருவதாகக் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சின்
செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் தமது கிடைத்த உளவு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்,”
காசா விவகாரத்தில் ஈரான் அளித்த ஆதரவை தொடர்ந்தே ஹவுதி இஸ்ரேல் மற்றும் செங்கடலில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஹவுதி செயல்பாட்டில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று ஈரான் கூறினாலும் கள நிலவரம் இதுவாகவே இருக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தாக்குதல்களில் தனக்குத் தொடர்பு இருப்பதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் பலமுறை மறுத்துள்ளதுடன்,
இது ஹூதிகள் தாங்களாகவே எடுத்த முடிவு என்றும் கூறியுள்ளது.