Monday, May 20, 2024
HomeLatest NewsWorld Newsஹமாஸ் அமைப்புக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு - அமெரிக்கா குற்றச்சாட்டு..!

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு – அமெரிக்கா குற்றச்சாட்டு..!

இஸ்ரேல் ஹமாஸ் போரின்  தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஹமாஸ் அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது.

ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது. உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகிச் சென்று விட முடியாது. அதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Recent News