ஆப்கானிஸ்தானின் தலைநகர் ‘காபூலில்’ அமைந்துள்ள ரஷ்யா தூதரகம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் “நாசர் கனானி” கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்படி பயங்கரவாத தாக்குதலை ஈரான் கடுமையாக கண்டிப்பதாகவும் உடனடியாக ஆப்கானின் தலிபான் அரசு தலையிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதோடு தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளில் இருவர் ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் மேற்படி பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என சர்வதேச செய்திகள் ஊகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.