Tuesday, December 24, 2024
HomeLatest Newsமாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதா? இன்று இறுதி தீர்மானம்

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதா? இன்று இறுதி தீர்மானம்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (18) காலை கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறும் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள், மாகாண மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாடசாலை நடவடிக்கைகளை இணையவழியில் முறைப்படி நடத்துவதா அல்லது மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைப்பதா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக, தற்காலிகமாக அருகில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதற்கான முறைமை தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ம் திகதிக்குள் இது அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிற அதேவேளை போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக இணைக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Recent News