Tuesday, December 24, 2024
HomeLatest Newsநிதி தொடர்பான விசாரணை..!ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் கைது..!

நிதி தொடர்பான விசாரணை..!ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் கைது..!

ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் காலை கைதான முன்னாள் முதலமைச்சர் , மாலை 5.24 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் விடுவிக்கப்பட்ட பின்னர் நிகோலா ஸ்டர்ஜன் விடுத்த அறிக்கையொன்றில்,

தான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

52 வயதான நிகோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்என்பி) முன்னாள் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். கடந்த மார்ச் மாதம் மேற்படி பதவிகளிலிருந்து நிகோலா ஸ்டர்ஜன் இராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டனிடமிருந்து ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் பெறுவதற்கான பிரச்சாரங்களுக்காக தனது ஆதராளர்களிடமிருந்து எஸ்என்பி கட்சி திரட்டிய சுமார் 600,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணையில் நிகோலா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இது தொடர்பான விசாரணையை ஸ்கொட்லாந்து பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.

நிகோலாவின் ஸ்டர்ஜனின் கணவரும் எஸ்என்பி கட்சியின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பீட்டர் முரேல், கடந்த ஏப்பரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அது மட்டுமன்றி, அக்கட்சியின் பொருளாளர் கொலின் பியட்டியும் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News