Wednesday, December 25, 2024
HomeLatest Newsபோலி மதுபானத்தை அடையாளம் காண தொலைபேசி செயலி அறிமுகம்!

போலி மதுபானத்தை அடையாளம் காண தொலைபேசி செயலி அறிமுகம்!

போலி மதுபானங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவற்றை உடனடியாக கணனி மூலம் அடையாளம் காணக்கூடிய செல்போன் செயலி (Mobile App) ஒன்றை மதுவரி திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தரமான சேவையை வழங்குவதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதுடன் செயலியை எண்ட்ரோய்ட் மற்றும் ஐ.போன் தொழிற்நுட்ப செல்போன்கள் ஊடாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

EXCISE TAX STAMP VALIDATOR என்ற பெயரில் இருக்கும் இந்த செயலி Google Play மற்றும் Apple Store ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை செயலியில் உள்ள QR மூலம் ஸ்கேன் செய்வதன் ஊடாக மதுபானம் போலியானதா அல்லது அசலா என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

QR ஸ்கேன் அதனை ஏற்க மறுத்தால் முறைப்பாடு செய்ய முடியும் என்பதுடன் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்

Recent News