உலகில் முதல் முறையாக கிராஸ் நெட்வொர்க் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை சீனா அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 62 கோடி பேர் 5ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நெட்வொர்க்கின் 5ஜி சேவை கிடைக்காத இடத்தில் அங்கு நல்ல கவரேஜ் நெட்வொர்க் பயிற்சி சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் 4 முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஜின்ஜாங் மாகாணத்தில் சோதனை முயற்சியாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆகவே, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி பயிற்று சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.