Thursday, December 26, 2024
HomeLatest Newsஎரிபொருள் பிரச்சினைகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எரிபொருள் பிரச்சினைகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் வழங்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, 077-7414241 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகளை அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த காமினி லொக்குகே இவ்வாறான தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தினார்.

இதேவேளை, குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எரிபொருள் பிரச்சினை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent News