Friday, November 15, 2024
HomeLatest Newsகுழந்தை பெற்றால் மாதம் 60,000 ரூபா:தென்கொரியாவில் புதிய திட்டம் அறிமுகம்!

குழந்தை பெற்றால் மாதம் 60,000 ரூபா:தென்கொரியாவில் புதிய திட்டம் அறிமுகம்!

தென் கொரியாவில் மக் கள் தொகையை அதிகரிக்க , குழந்தை பெற்றால் பெற்றோ ருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க அந்நாட்டு அரசு திட்ட மிட்டுள்ளது .

50 ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவில் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில் , 2001 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 5 இலட்சமாக குறைந்தது.

கடந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 2 இலட்சத்து 66 ஆயிரமாக குறைந்தது . பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டு வந்த நிலையில் , மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் 60,000 ரூபாய் ஒராண்டுக்கு வழங்கப்பட உள்ளது.

குழந்தைக்கு வயதாக வயதாக ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகை பாதியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News