தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வே உங்கள் இணைய பாதுகாப்பின் முதல் உத்தரவாதம்.
நம்பத்தகாத இணையதளங்களை பார்க்கவே கூடாது. ஏனெனில் இது போல தளங்களுக்குள் சென்றால் மொபைலில் வைரஸ் அல்லது ஏதேனும் ஸ்பைவேர் செயலி நிறுவப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நீங்கள் தெரியாத இணைப்பைக் கிளிக் செய்தால், அந்த இணைப்பைப் பார்வையிட்ட பிறகு, அங்கிருந்து எந்த வகையான கோப்பையும் பதிவிறக்க வேண்டாம். இப்படிச் செய்தால் உங்கள் போனில் வைரஸ் வரலாம். இது தவிர, உங்கள் தனிப்பட்ட தரவுகளும் கசியலாம்.
பெரும்பாலும் இலவச இணையத்தின் பேராசையில் நம்மில் பெரும்பாலோர் நம் போனை தெரியாத வை-ஃபை இணைப்புகளுடன் இணைக்கிறோம். இந்த தவறை செய்யவே கூடாது, இதன்மூலம் நமது தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிகாரப்பூர்வ கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலும் பல போலி செயலிகள் உள்ளன. அதிகம் பேர் பதவிறக்கம் செய்த மற்றும் நல்ல விமர்சனம் கொடுக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்.