Tuesday, December 24, 2024
HomeLatest Newsசர்வதேச ரீதியில் விமான டிக்கெட்டுக்கள் உயர்வடையும் சாத்தியம்!

சர்வதேச ரீதியில் விமான டிக்கெட்டுக்கள் உயர்வடையும் சாத்தியம்!

சர்வதேச ரீதியில் விமான டிக்கட்டுக்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக இவ்வாறு கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், உக்ரேன் – ரஸ்ய போரும் இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குளிரான காலநிலை அடுத்துவரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதினால், கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாடுகளின் விமான போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்படும் நிலைமை உயர்வடையும் எனவும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

Recent News