Friday, November 15, 2024
HomeLatest Newsசர்வதேச யோக தினம்...!மக்களுடன் இணைந்து விதம் விதமாக யோக செய்து அசத்திய நாய்...!

சர்வதேச யோக தினம்…!மக்களுடன் இணைந்து விதம் விதமாக யோக செய்து அசத்திய நாய்…!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதனை முன்னிட்டு நேற்றைய தினம் புதன்கிழமை ஜம்மு காஷ்மீரின் உதாம்பூரில் உள்ள மைதானம் பொது மக்கள் சிலர் ஒன்றில் யோகாவில் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்களின் அந்த யோக பயிற்சியில் நாய் ஒன்றும் பங்குபற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, அந்த நாயும் அவர்களுடன் இணைந்து மனிதர்களைப் போன்று விதம் விதமாக யோக செய்துள்ளது.

நாயின் இந்த செயற்பாடு அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன், அந்த காணொளியும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News