Tuesday, December 24, 2024
HomeLatest Newsதீவிரமடையும் உக்ரைன்-ரஷ்ய மோதல்:பலர் உயிரிழப்பு!

தீவிரமடையும் உக்ரைன்-ரஷ்ய மோதல்:பலர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கை பல மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது திடீரென ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கீவ் மீது மூன்று இடங்களில் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News