Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டில் தீவிரமடையும் எய்ட்ஸ் தொற்று: இலவசமாக ஆணுறை வழங்க முடிவு!

நாட்டில் தீவிரமடையும் எய்ட்ஸ் தொற்று: இலவசமாக ஆணுறை வழங்க முடிவு!

எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதன் காரணமாக, பொலன்நறுவை மாவட்டத்தில் பொது இடங்களில் நிறுவப்படவுள்ள கரும பீடங்கள் மூலம் மாதாந்தம் 50 ஆயிரம் ஆணுறைகளை இலவசமாக வழங்க பொலன்நறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதிநாள் வரை பொலநறுவை மாவட்டத்தில் 16 எய்ட்ஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் சிறுவர்கள்.

இந்த அதீத தொற்றுப்பரவலாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News