Thursday, January 16, 2025
HomeLatest Newsஇலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடு!

இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடு!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு அடுத்த நெருக்கடியாக பல மருந்து வகைகளுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்புக்களும் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் வர்த்தகத் தலைநகராக கொழும்பில் உள்ள பல முன்னணி மருந்தகங்களில் நீரிழிவு நோயாளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் சில வகையான இன்சுலின் தீர்ந்துவிட்டதாக கொழுப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை முன்னணி மருத்துவமனைகளிலும் செயல்படும் மருந்தகங்களிலும் பற்றாக்குறை நிலவுவது கவலையளிக்கிறது.

அத்தியாவசிய மருந்துகள், சில உயிர்காக்கும் மருந்துகள் நம்மிடம் வேகமாக தீர்ந்துவிட்டதாக இலங்கையில் உள்ள மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News