Tuesday, December 24, 2024
HomeLatest Newsநெருக்கடியான நேரத்தில் மஹிந்தவிடமிருந்து வெளியான தகவல்

நெருக்கடியான நேரத்தில் மஹிந்தவிடமிருந்து வெளியான தகவல்

நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியில் உள்ள பலர் பேசினாலும், தற்போதைய காலம் அதற்கு உகந்தது அல்ல என்பதே தமது கருத்து என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாகவும், அவர்களால் தேர்தல் மனப்பான்மையை வளர்க்க முடியாது எனவும், தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிகளுக்கு தனித்தனியாக அல்லாமல் அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கட்சி நிறம் பாராது ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் எனவும், நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உதவ தயாராக இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recent News