Tuesday, January 28, 2025
HomeLatest Newsஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் மொத்தமாக 12,700,000 பேர் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ள நிலையில், 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளனர்.

குறித்த எண்ணிக்கையில் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.

அதேபோன்று 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியளவில் வெறுமனே 23,488 பெண்களுக்கு மாத்திரமே சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Recent News