Wednesday, January 1, 2025

கோட்டா சிங்கப்பூரில் தங்கியிருந்த இடம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த இடம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவிற்கு சொந்தமான வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் கோட்டாபய தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச இலங்கை அறக்கட்டளையின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அச்சல வீரசிங்க என்ற நபர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவுக்கு சிங்கப்பூரில் வீட்டுத் தொகுதி ஒன்று இல்லை எனவும் கோட்டாபய அங்கு தங்கியிருந்ததாக வெளியாகும் செய்தி உண்மையில்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Videos