Friday, January 24, 2025
HomeLatest Newsஇந்தியா பிரமோஸ்களைக் கொள்வனவு செய்ய இந்தோனேசியா – மலேசியா ஆர்வம்!

இந்தியா பிரமோஸ்களைக் கொள்வனவு செய்ய இந்தோனேசியா – மலேசியா ஆர்வம்!

இந்திய தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

மலேசியா வான் படையில் தற்போது இயங்கி வரும் su-30 ரக விமானங்களில் இணைக்கப்படுவதற்காக ப்ரம்மோஸ் ng ஏவுகணைகளின் வானில் இருந்து ஏவப்படும் பதிப்புகளைக் கொள்வனவு செய்ய விரும்புவதாக மலேசியா அறிவித்துள்ளது.

நடைபெற்ற defence expo கண்காட்சிகளின் போது இதனைத் தெரிவித்த மலேஷியா அதிகாரிகள், su-30 விமானங்களில், நடுப்பகுதியில் ப்ரம்மோஸ் ng ஏவுகணைகளின் 450km தாக்குதல் எல்லை கொண்ட பதிப்பு ஒன்று இணைக்கப்பட முடியும் எனவும், இறக்கைகளில் 2 ஏவுகணைகள் இணைக்கப்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு அதன், su-27 விமானங்களிற்காக ப்ரம்மோஸ் ஏவுகணைகளின் வானிலிருந்து ஏவப்படும் பதிப்பு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகி இருந்தது. தற்போது இந்த ஏற்றுமதி நடவடிக்கைகள் மிக முன்னேற்றமான நிலையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Recent News