கால்வான் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிக்கலாகிவிட்டது என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
2020 க்கு முன்னர் செயலில் இருந்த ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா சம்பந்தப்பட்ட முத்தரப்பு பொறிமுறை இருப்பதை குறிப்பிட்ட அவர் தற்போது அதனையே மீண்டும் அமுல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்தியா-சீனா உறவுகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சிக்கான நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய பிரதேசங்களைக் கோரும் “நிலையான வரைபடத்தை” சீனா வெளியிட்டதை அலிபோவ் குறைத்து மதிப்பிட்டு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.