இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித்ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டம், பஸில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்னர் நடைபெற்றது.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அப்போது, ‘மொட்டு’க் கட்சியின் மாநாட்டுக்கு, பாரதிய ஜனதாக் கட்சி தலைவரை அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் எனப் பஸில் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், அமித் ஷாவின் வருகை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக தகவம் எதுவும் வெளியாகவில்லை.