Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்தியாவின் அடுத்த வெற்றி பயணம் - லெக்ரேஞ்சியன் புள்ளியை நெருக்கும் ஆதித்யா எல் - 01...

இந்தியாவின் அடுத்த வெற்றி பயணம் – லெக்ரேஞ்சியன் புள்ளியை நெருக்கும் ஆதித்யா எல் – 01 ..!

ஆத்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திருந்து பி.எஸ்.எல்.வி.சி 57 ராக்கெட் மூலம் செப்டம்பர் 2 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் – 01 மூலம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் புது சாதனை படைத்தது இந்தியா.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் , எல் – 01 லெக்ரேஞ்சியன் புள்ளியை சுற்றி ஆதித்யா எல் – 01 நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கு மேலும் ஆகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆதித்யா எல் – 01 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Recent News