பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ராணுவ ஆளில்லா விமானங்களை தயாரிக்க சீன கருவிகளை பயன்படுத்த இந்தியா தடை விதித்துள்ளது.
ட்ரோன்களின் தகவல் தொடர்பு செயல்பாடுகள், கேமராக்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன் மற்றும் இயங்கு மென்பொருள் ஆகியவற்றின் உற்பத்திக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் கொண்ட அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ராணுவப் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனத் தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் முடிவை இந்தியா எடுத்து வருகிறது.
அதனடிப்படையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய எல்லையில் உள்ள நாடுகளின் உபகரணங்கள் அல்லது பிற பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் ஏலதாரர்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.