Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் களமிறங்கிய இந்தியாவின் முக்கியஸ்தர்..!

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் களமிறங்கிய இந்தியாவின் முக்கியஸ்தர்..!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுடன் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூடியிருந்த பிரிக்ஸ் கூட்டத்தின் ஒருபகுதியிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டோவல் சீன உயர்மட்ட தூதர் வாங் யியையும் சந்தித்து பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இந்தியா-சீனா இருதரப்பு உறவின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News