இந்தியா தடைகளை படிக்கற்களாக மாற்றி தனது சாதனை பயணத்தை மிக அவதானமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றது.
இந்தியா இராணுவ தளபாடங்கள் மற்றும் போர் ஆயுதங்கள் தயாரிப்பில் தனது காலை ஆழப் பதித்துக் கொண்டுள்ளதுடன் நிறுத்தி விடாது மறு பக்கத்தில் ஆயுத ஏற்றுமதிக்கான மூலோபாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் ஒரு புறத்தில் போர் முனைப்புக்களுடனும் மறு புறத்தில் பொருளாதார சிக்கல்களுடனும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாக இந்தியாவின் மிக நெருங்கிய அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியில் இரண்டு அரசாங்கங்களும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தியா மீது எப்போதும் கண் வைத்து, வைத்த குறி மாறாது காத்துக் கொண்டிருக்கின்ற பாக்கிஸ்தான் நிலைகுலைந்துள்ள சூழல் பார்த்து இந்தியா தனது ஆயுத ஏற்றுமதிக்கான தளத்தை மேலும் விரிவு படுத்தியிருக்கின்றது.