[13:02, 26/05/2023] சமூகம் Media: உயர் கல்வி பயில வேண்டும் என்ற போர்வையில் வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்ட மோசடி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவுஸ்ரேலியா பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாணவர்களுக்கு கட்டப்பாடுகள் மற்றும் தடை விதித்துள்ளன. இவ் விடயத்தை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
விக்டோரியாவிலுள்ள பெடரேஷன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் , பஞ்சாப் , ஹரியானா , உத்தரகாண்ட் , உத்தர பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் ஆகிய பிரதேசங்களிலிருந்து மாணவர்களை இனிவருங் காலங்களில் இணைக்க வேண்டாம் என கல்வி முகவர்களுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரு நாடுகளுக்குமிடையில் மாணவர்கள் , பட்டதாரிகள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிகர்களின் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.