Tuesday, December 24, 2024
HomeLatest Newsநயாகரா நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இந்திய மாணவி...!

நயாகரா நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இந்திய மாணவி…!

கனடாவிற்கு படிப்பிற்கான விசாவில் சென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது

பஞ்சாப்பில் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் சூட்டுவால் எனும் கிராமத்தில் வசித்து வந்த 21 வயதான பூனம்தீப் கவுர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படிப்பிற்கான விசாவில் கனடா சென்று அங்கு தங்கி கல்வியைத் தொடர்ந்து வந்தார்.

இந் நிலையில் தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள புகழ் பெற்ற நயகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அவ் வேளை திடீரென ஆழமான குழியொன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பூனம்தீப் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக தூதரகத்தினூடாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டு விட்டதா ? இல்லையா ? என்பது தொடர்பில் இதுவரை விபரங்கள் வெளியாகவில்லை.

குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்கள் பல ஏற்கனவே. பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recent News