Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூ.50 லட்சம் தர முன்வந்த இந்திய அரசியல் முக்கியஸ்தர்!

இலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூ.50 லட்சம் தர முன்வந்த இந்திய அரசியல் முக்கியஸ்தர்!

இலங்கை மக்களுக்கு சொந்த நிதியாக ரூ.50 லட்சம் தர அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்வந்துள்ளார்.

இவ்வாறு முன்வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ரூ.50 லட்சம் தருவதாக அறிவித்தார் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார் என்று பேரவையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

மனிதநேயத்துக்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தீர்மானம் விளக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Recent News