Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளி தெரிவு..!

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளி தெரிவு..!

உலக வங்கியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சீக்கிய குடும்பமொன்றில் பிறந்த 63 வயதான அஜய் பாங்கா, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்திருந்தார்.

அத்தோடு அஜய் பாங்கா, எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி முதல் 5 வருடங்களுக்கு உலக வங்கியின் தலைவராக கடமையாற்றவுள்ளார்.

வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட உலக வங்கியின் தலைவராக அமெரிக்கப் பிரஜையொருவர் பதவி வகிப்பது பாரம்பரியமாக கூறப்படுகின்றது.

மேலும், உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மெல்பாஸ் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News