Tuesday, May 7, 2024
HomeLatest Newsபோர்ப் பயிற்சிகளில் தீவிரம் காட்டும் இந்திய கடற்படை!

போர்ப் பயிற்சிகளில் தீவிரம் காட்டும் இந்திய கடற்படை!

மொசாம்பிக், தன்சானியா ஆகிய இரண்டு நாடுகளுடன் இணைந்து இந்திய கடற்படை புதிய போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

இந்த பயிற்சிகள் கடந்த அக்டோபர் 27ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன.

இதில் இந்தியாவின் சார்பாக வழிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள் கொண்ட போர்க் கப்பல்கள் ஆன INS தர்காஷ் மற்றும் மார்கோஸ் கலந்து கொண்டிருந்தன.

இந்த பயிற்சிகள் தன்சானியாவில் உள்ள டர் எஸ் ஸலாம் துறைமுகத்தில் நடைபெற்று இருந்ததோடு அக்டோபர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும் தொடர்ந்து போர் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.

இதில் சிறு படகுகளின் தாக்குதல் நடவடிக்கைகள், ஹெலிகாப்டர் இணைந்த கடற்படை தாக்குதல் நடவடிக்கைகள், துறைமுகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து நடவடிக்கைகள் போன்ற பலவிதமான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த போர் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந்த சமுத்திர பிராந்திய நாடுகளுடன் SAGAR திட்டத்திற்கு இணங்க இந்தியா ஒன்றிணைந்த போர் தகமைகளை வளர்த்துக் கொள்வதற்கான தனது ஈடுபாட்டை இந்த பயிற்சியின் மூலம் தெரிவித்துள்ளது. என அறியப்பட்டுள்ளது. 

Recent News