Friday, January 24, 2025
HomeLatest Newsஇந்திய மாப்பிள்ளையான எலான் மஸ்க்..!ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!இணையவாசிகள் திண்டாட்டம்..!

இந்திய மாப்பிள்ளையான எலான் மஸ்க்..!ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!இணையவாசிகள் திண்டாட்டம்..!

இந்திய மாப்பிள்ளையாக மாறிய எலான் மஸ்கின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படங்களில் எலான் மஸ்க், இந்திய மாப்பிள்ளை போன்று ஷெர்வானி அணிந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அவர் அதே உடையில் குதிரையில் அமர்ந்திருப்பதும் போன்றும், நடனங்கள் ஆடுவது போன்றும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதனை பார்த்த சில இணையவாசிகள் இது எப்ப இருந்து என்று கேள்வியெழுப்பி விவாதம் நடத்தி வருகின்றனர்.

பின்னரே அந்த புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என தெரியவந்ததுள்ளது.

அந்த வகையில், மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர் ஒருவரே செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மஸ்கின் புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.

இதையடுத்து இந்திய மாப்பிளை போன்று தான் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் தனக்கு பிடித்துள்ளதாக ட்விட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News