Sunday, January 26, 2025
HomeLatest Newsபுதிய செயற்கைக்கோள்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தும் இந்தியா!

புதிய செயற்கைக்கோள்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தும் இந்தியா!

இந்தியாவில் இணையத்தின் பாவனை மற்றும் இணைய வழி தொழிநுட்பத்தை முன்னேற்றும் வகையிலும் பாவனைத் திறனை அதிகரிக்கும் வகையிலும் இந்தியாவின் முன்னணி இணைய நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் பல கண்டுபிடிப்புக்களையும் இணைய வழி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தற்போது “ஒன் வெப்” எனப்படும் புதிய பெயரில் புதிய செயற்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி நிறுவனம்.

இந்த செயற்திட்டத்தில் 36 செயற்கைக் கோள்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த 36 செயற்கைக் கோள்களின் தொகுப்பை விண்ணுக்கு ஒரே நேரத்தில் அனுப்பி அவற்றை செய்ற்படுத்துவதன் மூலம் இணையத்தின் பலத்தை அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலகிக் கொண்டதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி அமைப்புடன் ரஷ்யாவின் உறவு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போது இந்தியா மேற்கோள்ளும் புதிய சாதனை முயற்சியில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News