Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் - கதைகட்டும் பாகிஸ்தான்..!

தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் – கதைகட்டும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு
இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று முன்தினம் (29) மிலாது நபி பிறந்த நாளை ஒட்டி மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட போது தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்த சம்பவத்தில் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இந்தியா தான் இந்த தாக்குதலை நடாத்தியதாக உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்டீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் உளவுத் துறை தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.

Recent News