Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஇந்தியா மிகச் சிறப்பாக செயற்படுகின்றது..!பிரிட்டன் அமைச்சர் புகழாரம்..!

இந்தியா மிகச் சிறப்பாக செயற்படுகின்றது..!பிரிட்டன் அமைச்சர் புகழாரம்..!

ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள இந்தியா மிகச் சிறப்பாக செயற்படுவதாக பிரிட்டன் அமைச்சர் ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை ஏற்றது தொடக்கம் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜி20 கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.

அந்த வகையில், கோவாவில் சுற்றுலாதுறை தொடர்பாக ஒருங்கிணைப்பட்ட ஜி20 கூட்டம் அண்மையில் நிறைவடைந்து.

அந்தக் கூட்டத்தில் பிரிட்டன் அமைச்சர் ஜான் விட்டிங்டேலும் பங்கேற்றுள்ள நிலையில் அவர் தெரிவிக்கையில், ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றிருக்கும் இந்தியா மிகச் சிறப்பாக செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோவாவில் நடத்தப்பட்ட கூட்டம் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாக அந்த கூட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில், நீடித்த கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக உரையாடல் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜி20 உச்சி மாநாட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதில் தமது பிரதமர் ரிஷி பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent News