Wednesday, December 25, 2024
HomeLatest Newsகோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா! இலங்கைக்கு மேலும் நெருக்கடி

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா! இலங்கைக்கு மேலும் நெருக்கடி

கோதுமை மாவு ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு கோதுமை மாவு ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. தமது கோதுமை உற்பத்தியை பாதுகாப்பு இருப்புப் பகுதியாக பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை இந்தியாவில் இருந்து பிரட்தூள்களை இறக்குமதி செய்தது. மேலும் இந்தியாவிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் இருந்ததாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது துருக்கியில் இருந்து மட்டுமே கோதுமை மாவை இலங்கை இறக்குமதி செய்ய முடியும்.

Recent News