Friday, November 15, 2024
HomeLatest Newsஇந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்! ஜனாதிபதி ரணில்

இந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்! ஜனாதிபதி ரணில்

வரலாறு, இந்தியாவையும் இலங்கையையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இணைத்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு டோர்னியர் 228 உளவு விமானம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், இரு நாடுகளும் அதனைக் கட்டியெழுப்ப வேண்டியிருப்பதால், இரு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனும் போது, ஒரு முகம் ஒருவழியாக விழுவதற்கும், மறுமுகம் மறுபக்கம் விழுவதற்கும் சாத்தியமில்லை.

எதுவாக இருந்தாலும் சரித்திரம், இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்திருக்கிறது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு தமது அறிவுரையை கூற விரும்புவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

இந்திய சகாக்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் அவர்களை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அதைச் செய்யாவிட்டால், பிரச்சினைகளைப் பார்ப்பதும், ஒருவருக்கொருவர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல பகுதிகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொதுவான கருத்துக்கள் உள்ளன. இலங்கையை பொறுத்தவரை கடலின் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடாகும்.

இந்தியா, அதன் சொந்த நலன்களைக் கவனிக்கும் அதே வேளையில், உலகளாவிய சக்தியாக அதன் பங்கையும் பார்க்க வேண்டும்.

எனவே இலங்கையர்கள் அவர்களிடம் பேசுவது அவசியம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Recent News