Tuesday, January 28, 2025
HomeLatest NewsIndia Newsஇந்தியா மற்றும் அமெரிக்கா உறவினால் உலகிற்கு நன்மை..!பிரதமர் மோடி கருத்து..!

இந்தியா மற்றும் அமெரிக்கா உறவினால் உலகிற்கு நன்மை..!பிரதமர் மோடி கருத்து..!

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கு இடையிலான உறவு உலகிற்கு நன்மை பயக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளில் அரசு முறை பயணத்தை நிறைவு செய்த பின்னர் இந்தியா திரும்பியுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனது அரசு முறைப்பயணத்தை முடித்துக் கொண்டு, இரு நாள் அரசு முறைப் பயணமாக எகிப்துக்கு புறப்பட்டு சென்றார்.

அதையடுத்து, இன்றைய தினம் (ஜூன்26) புதுடில்லி விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மோடியை , பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்ட எம்.பி.,க்கள் போன்றோர் வரவேற்றனர்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கு நன்மை அளிக்கும் என்றும் அமெரிக்காவில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இரு தரப்பு உறவை மென்மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News